தமிழ்நாட்டில் முதன்முறையாக சுவாச மீட்பு பயிற்சி ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் தொடக்கம்

 
omanthurar

 

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுவாச மீட்பு பயிற்சி ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது...

பொது மக்களுக்கான அவசரகால இதயத் துடிப்பு மற்றும் சுவாச மீட்பு பயிற்சி முகாம் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி உட்பட மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.

jeyanthi

இந்த பயிற்சி முகாமில், அவசர காலங்களில் உயிருக்கு போராடுபவரை காப்பாற்ற செய்ய வேண்டிய சில அடிப்படை உதவிகளை மருத்துவர்கள் பொது மக்களுக்கு செய்து காட்டினர். பின்பு பொது மக்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சுவாச மீட்பு பயிற்சியை பொம்மை மனித உடலுக்கு செய்து பார்த்தனர்.
முதலில்  பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு செய்ய வேண்டும் என வழிமுறைகள் குறித்து பேசிய ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, சாலையில் செல்லும் போதோ அல்லது ஆபத்து காலங்களில் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காப்பாற்ற முதலுதவி செய்ய வேண்டும் எனவும், அதற்கு முன் முதலில் சுவாசம் இருக்கிறதா, இதய துடிப்பு இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும் என்று கூறினார்.
 

முதலில்  பாதிக்கப்பட்ட நபரின் தோலில் தட்ட வேண்டும், அவர் மூச்சு விடுவது நமக்கு கேட்கிறதா என்றும், பேசுகிறாறா எனவும், சுவாசம் குறித்து கண்டறிய வேண்டும், ன்னர் அவரது இதயத்தை 30 முறை  நன்றாக அமுக்க வேண்டும் என கூறினார்.