இரவில் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு!!

 
AUTO

இரவு நேரக் குற்றங்களை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில்  இரவில் இயங்கும் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

sexual abuse

வேலூரில் கடந்த 16-ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழலில் வேலூர் மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

tn

ஆட்டோவின் பின்புறம் ஓட்டுநரின் ஐடி , செல்போன் எண் ,உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றும் , ஓட்டுநரின் உரிமம் , வாகன சான்று உள்ளிட்டவை பயணிகளுக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கூறிய விதிகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் ஆட்டோ ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது , பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் , வேலூரில் எடுத்துள்ள இந்த  அதிரடி நடவடிக்கையை தமிழக முழுவதும் அமலாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.