"விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 
mk stalin

கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு செயல்படும் ஆட்சியல்ல. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதி கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் ஆட்சிதான் திராவிட ஆட்சி. திமுக ஆட்சியில் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மனு அளிக்கும்போதே நிச்சயம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை மக்களின் முகத்தில் தெரிகிறது.

 rn

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என ஈபிஎஸ் சொல்கின்றார்;பெண்களுக்கு இலவச பேருந்து, பால் விலை, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது;கலைஞரின் மகன் நான்.சொன்னதை செய்வேன் .ஜெயலலிதா ஆவியுடன் பேசுவதாக சமாதியில் தியானம் செய்தவர் ஓபிஎஸ் . ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார் எடப்பாடி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் பல பிரச்னைகள் உள்ளன.  விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, மக்களுக்கு தெரிவிப்போம. அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . அறிக்கைகளை நாங்களே வைத்து கொள்ள மாட்டோம் , பகிரங்கமாக பொதி வெளியில் -
வெளியிடுவோம்"  என்றார்.

stalin
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றி விட்டது. மீதமுள்ள வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். நிதிநிலை சரியானதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை வழங்கப்படும். படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர,  தகுதி இருந்தால்தான் படிக்கவே வரவேண்டும் என்று சொல்லுவது மாபெரும் அநீதி என்றார்.