ஆம்புலன்ஸ், அவசர ஊர்திகளுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்!!

 
 traffic police

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ,  வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

traffic

தமிழ்நாட்டில் சாலை விதிகளை மீறி பயணம் செய்வோர் பலர் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்து  பயணிக்கும் இளைஞர்களை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.  இந்த சூழலில் தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பல்வேறு குற்றங்களுக்கான, விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது மாற்றப்பட்டு அதற்கான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

tn

இந்நிலையில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகளுக்கு வழி விடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  அத்துடன் தேவையில்லாமல் ஹாரன் அடித்தால் ரூபாய் 2 ஆயிரம் என்றும் தொலைபேசி உபயோகித்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  கனரக வாகனம் வடிவமைப்புக்கு அப்பால் நீண்டு சென்றால் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு அவர்களுடன் பயணிக்கும் நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என புதிய விதியை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.  ரேசிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும், ரிஜிஸ்ட்ரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய விதிகள்  இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் இந்த விதிகள் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.