வண்டலூர் பூங்காவுக்கு ரூ.6 கோடி சிறப்பு நிதி!!

 
govt

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

vandalur zoo

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என்று அழைக்கப்படும் இப்பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவான இதில், ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூங்கா மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

tn

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுக்காக சிறப்பு நிதி ரூபாய் 6 கோடியை வனத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சிறப்பு நிதியை  ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. கொரோனா காரணமாக பூங்கா தொடர்ந்து மூடப்பட்டதன் விளைவால் , வருவாய் இழப்பு ஏற்பட்டதால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.