மகளிருக்கு மாதம் ரூ.1000, வரும் ஆண்டில் வழங்கப்படும் .. - சபாநாயகர் நம்பிக்கை..

 
 சபாநாயகர் அப்பாவு தகவல்!

மகளிருக்கான உரிமைத்தொகை வரும் ஆண்டில் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர். தொடர்ந்து  3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவான நேற்று கரகாட்டம், தெருக்கூத்து என தமிழரின் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டம்.. எப்போ தெரியுமா??

இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு,  தமிழ்நாட்டின் வருவாய் பெருக்கும்  திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவார்  என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்  அடுத்த ஆண்டு, நிச்சயமாக மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  நல்ல இளைஞர்களை, மாணவர்களை உருவாக்குகிற ஆற்றல் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது என்றும், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.