6ம் வகுப்பு கணித புத்தகத்தில் ரம்மி பாடம்.. - அடுத்த ஆண்டு நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

 
பள்ளிக்கல்வித்துறை

அடுத்த கல்வியாண்டு முதல் 6ம்  வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும்  ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுக்களில்  பணத்தை இழந்து பலரும்  தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.  இதைகருத்தில் கொண்டு  தமிழக அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசர சட்டம் இயற்றியது. இன்னும் அதற்கு ஆளுநர் அனுமதி தராத நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள கணித பாடப் புத்தகத்தில்,  ரம்மி எப்படி விளையாடுவது என்பதை கற்று தரும் வகையிலான பாடங்கள் இடம் பெற்றுள்ளது.  

6ம் வகுப்பு கணித புத்தகத்தில் ரம்மி பாடம்.. - அடுத்த ஆண்டு நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றி கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை பாடபுத்தகத்தில் ரம்மி குறித்த பாடம் இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் ரம்மி குறித்த பாடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை நீக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில்,  ஏற்கனவே இந்த பாடப்பகுதி இருந்துள்ளது. தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால் காரணமாக இதனை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.  அடுத்த கல்வியாண்டில் இந்த பாடப்பகுதி இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.