எஸ்.பி.ஐ வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம்..

 
எஸ்.பி.ஐ வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம்..

எஸ்பிஐ வங்கி தனது குறிப்பிட்ட சில திட்டங்களில்  வட்டி விகிதத்தை மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது.

rbi

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை  4 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாகச்  உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து   வணிக வங்கி நிறுவனங்கள் வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்து வருகின்றன. மேலும் பல வங்கிகள் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தங்களுடைய கடன் திட்டங்களில் மாற்றம் செய்து  அறிவித்துள்ளது.  

sbi

அதாவது ரூ. 2 கோடி   மற்றும் அதற்கு அதிகமான முதலீடு செய்யும்  திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தப்படுவதாக கூறியுள்ளது.  இன்று முதல்  எஸ்பிஐ கடன் வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது.  தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன் வட்டி விகிதம் 6.65 மற்றும் சிஆர்பி ஆகியவற்றுடன் சேர்ந்து அதிகரிக்க உள்ளது.  இதில்  7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3%  ஆகவும்,  46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5% ஆகவும் வட்டியை உயர்த்தியிருக்கிறது.   இதேபோல்  180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்ம், 1 ஆண்டு வரையிலான திட்டம் என அனைத்து திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்த்தி  வழங்குகிறது.