6 மாதத்திற்குள் 42,000 பேருக்கு பணி நியமனம் : எஸ்.எஸ்.சி அதிரடி அறிவிப்பு..

 
வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள்  15,247 பதவிகளுக்கான பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளதாகவும்,   42,000 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும்   மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சொன்னா நம்புங்க! மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும்…..
இந்தியாவில்  கொரோனா  பரவல் காரணமாக கடந்த 2ஆண்டுகளாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மத்திய மற்றும் மாநில அரசு   துறைகளில்  பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்துவந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே,  போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன.  அதேநேரம், இளைஞர்கள்  4 ஆண்டுகள் மட்டும் முப்படைகளில் பணிபுரியும்  வகையிலான ‘அக்னிபாத்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.  இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்  நோக்கில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தாலும், ஓய்வூதியப் பலன்கள்  மற்றும் பணி நிரந்தரம் இல்லாததால்  இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை  எதிர்க்கின்றனர்.  

வேலைவாய்ப்பு
இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம்  இந்த ஆண்டு இறுதிக்குள்,  42,000  பேர்  பணியமர்த்தப்படுவார்கள் என செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்திய அரசால் வரும் காலங்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன செய்யப்பட உள்ளனர். அத்துடன் 42,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் அரசு துறைகளில் உள்ள 67,768 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.