சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழக்கு - சசிகலா, இளவரசிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு..

 
சசிகலா

சிறையில்  சொகுசு வசதிகள் செய்துதருவதற்காக  அதிகாரிகளுக்கு  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  நெருங்கிய தோழியான சசிகலா, அவரது ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிமகாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில்  சசிகலாவுக்கு  நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.  அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் 4 ஆண்டுகள்  சிறைதண்டனை அனுபவித்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் . 

சசிகலா தண்டனை காலத்திற்கு முன் விடுதலையாக மாட்டார் : கர்நாடக சிறை அதிகாரி தகவல்..!

அங்கு சசிகலாவுக்கு பெண்கள் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டு ,  கைதி எண்ணும், கைதிகளுக்கான ஆடைகளும் வழங்கப்பட்டன. ஆனால் சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் என பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதோடு  சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடையில் ஷாப்பிங் சென்று வந்தது போல் வீடியோ ஒன்றும் பரவியது. பின்னர் சிறையில் சொகுசாக இருப்பதற்கு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாக புகார் எழுந்தது. தொடர்ந்து இந்த  வழக்கில்  சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் குற்றவாளிகளாக  சேர்க்கப்பட்டனர்.

ஓ.பி.எஸ்- எடப்பாடியை மிரட்டும் சசிகலா… சட்டமன்றத்தேர்தலில்  கச்சேரி ஆரம்பம்..!

இதையடுத்து 24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என  ஐந்து பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.  இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு சென்ற சசிகலா,இளவரசி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு ஆஜராகினர். தொடர்ந்து இருவரும் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி  லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சசிகலா, இளவரசி  இருவருக்கும்  நிபந்தனை  முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  இருவரும் தலா ரூ.3 லட்சம் பாண்ட்-ஐ  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும்  2 தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் போன்ற  நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.