#BREAKING ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அளிக்கவிடாமல் தடுத்த சசிகலா - ஜெயலலிதா இறந்த தேதி, நேரம் மாற்றம்?

 
tn

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஆஞ்சியோ, அறுவை சிகிச்சை ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அது நடக்கவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

jayalalitha

தமிழக சட்டப்பேரவையில் இன்று  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் , அருணா ஜெகதீசன் ஆணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. அதன்படி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அடிப்படையில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.

sasikala

  • அதில், டாக்டர் ரிச்சர்ட் பிலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை?
  • எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
  • சசிகலா , கே.எஸ். சிவக்குமார்,  ராதாகிருஷ்ணன்,  விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரை.
  •  சசிகலா வெளியேற்றப்பட்ட 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவரிடையே சுமுக உறவு இல்லை.

jayalalitha

  •  சசிகலாவே குற்றம் சாட்டுவதை தவிர எந்த முடிவுக்கு வர இயலாது.
  • ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார்.
  • சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.
  • 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம்.