மின் நுகர்வோர் ஆதாரை இணைக்க தமிழக அரசு ஒப்புதல் - அரசாணை வெளியீடு

 
govt

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை  இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

eb

தமிழகத்தில் மின்வாரியமானது 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,  500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதன் மூலம் 2.22 கோடி வீடுகள் பலனடைந்து வருகின்றன. 3000 கோடிக்கு மேல் ஆண்டுக்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.  இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது . மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு பத்து ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தவிர பல முறையில் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

EB

 இருப்பினும் ஒரு சிலர் விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக ரேஷன் கார்டுகளிலும் பல மோசடிகள் அடங்கியிருக்கின்றன. இதை தடுக்கும் விதமாக ஆதார் என்னுடன் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இணைக்கும் வபோது  ஒரே நபர் வேறு முகவரியில் கார்டு வாங்க முடியாது என்ற சூழல் உண்டாகியுள்ளது . மற்ற குடும்ப அட்டைதாரர்கள் உறுப்பினராக சேர முடியாது என்றும்,  ரேஷன் அட்டையை தொடர்ந்து இலவச மின்சாரத்தில் முறைகேடு தடுத்த ஆதாரங்கள் மின் இணைப்பை இணைக்க முடிவு செய்யப்பட்டது.  மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அறிவித்துள்ளது.

eb bill

மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு ஆவணங்களை அளிக்கலாம் . விரைவில் மின்நாட்டையுடன் ஆதார் எண்ணைக்கும் செயல்முறை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில்,  ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைவரும் மின் இணைப்பை ஆதாரங்கள் இணைக்க வேண்டும் என்பது சட்டமாகும். தொழிற்சாலைகள் , நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை