"சமர்த் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற நெசவாளர்களுக்கு உதவித்தொகை" - ஜி.கே. வாசன் வேண்டுகோள்!

 
tn

சமர்த் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டிய உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

t

இதுகுறித்து தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் " கைத்தறி நெசவு திறன் மேம்பாட்டு பயிற்சி " கைத்தறியில் புதுமை புகுத்துதல் திட்டம் மூலம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு “ சமர்த் திட்டம் ” என்கிற பெயரில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கதக்கது .  தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பகுதியான காஞ்சிபுரம் , கும்பகோணம் , ஈரோடு , பரமக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஜவுளித்துறையின் சார்பாக , தமிழ்நாடு கைத்தறிதுறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . இந்த பயிற்சி திட்டத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்களும் , தனியார் நெசவாளர்களும் 40 முதல் 45 நபர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு பயிற்சி முகாமில் நாள் ஒன்றுக்கு ரூ .300 / - வீதம் உதவித் தொகை வழங்குகிறது . 

gk

இப்பயிற்சி வகுப்பின் மூலம் இதுவரை 1500 கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது . பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை இதுவரை தமிழ்நாடு கைத்தறிதுறை சரக உதவி இயக்குனர் அலுவலகம் வழங்கப்படவில்லை . நெசவாளர்களின் நலன் கருதி இதுவரை பயிற்சிப்பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கும் , தற்பொழுது பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கும் உதவித்தொகையை உடனடியாக தமிழக அரசு , தமிழ்நாடு கைத்தறிதுறையின் மூலம் தாமதமில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.