10-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கியது

 
test

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு  எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கியது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம்  நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று தொடங்கியது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 

test

முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 18 லட்சம் மாணவர்கள் 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்வு தொடங்கும்  2 மணி நேரம் முன்னர் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டது. இன்று முதல் வரும் ஏப்ரல் 4-ம் தேதி வரை 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. முதல் திருப்புதல் தேர்வின் போது விடைத்தாள்களை வெவ்வேறு பள்ளிகள் மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த முறை விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்துகொள்ளலாம் என பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.  வினாத்தாள்களை கசிய விட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.