சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்வேன் - அமைச்சர் சேகர்பாபு அதிரடி

 
sekarbabu

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:  சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிகாரிகளை ஆய்வு செய்ய மறுக்கப்பட்டு உள்ளதை பதிவு செய்துள்ளோம். சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். 

natarajar koil

பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கூறினார். . ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக திமுக அரசு உள்ளது. ஆர்.ஏ. புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.