சென்னை மண்டல குழு தலைவர்கள் தேர்வு!!

 
corporation

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் தேர்தல்  இன்று நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் மறைமுக தேர்தல் மூலம் மண்டல குழு தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.  பிற்பகல் 2.30 மணிக்கு கணக்குகள் மற்றும் தணிக்கை ,கல்வி,  விளையாட்டு பூங்கா, சுகாதாரம், குடும்ப நலம் ,வரிவிதிப்பு மற்றும் நிதி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட ஆறு நிலை குழுக்களுக்கு 15 உறுப்பினர்கள் என மொத்தம் 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

dmk

சென்னை மாநகராட்சி மன்ற மண்டல குழு தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் நியமன குழு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக சார்பில் திருவொற்றியூரில் தனியரசு, மணலியில் ஆறுமுகம், மாதவரத்தில் நந்தகோபால் ,தண்டையார்பேட்டையில் நேதாஜி கணேசன், ராயபுரத்தில் ஸ்ரீராமுலு ,திருவிக நகரில் சரிதா மகேஷ்குமார் ,அம்பத்தூரில் மூர்த்தி, அண்ணாநகரில் ஜெயின், தேனாம்பேட்டையில் மதன்மோகன், கோடம்பாக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி, வளசரவாக்கத்தில் நொளம்பூர் ராஜன், ஆலந்தூரில் சந்திரன் , அடையாரில் துரைராஜ் ,பெருங்குடியில் பெருங்குடி எஸ் வி ரவிச்சந்திரன், சோழிங்கநல்லூரில் மதியழகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

arivalayam
அதேபோல் நிலைக் குழு தலைவர்கள் மற்றும் நியமன குழு உறுப்பினர்களாக கணக்கு குழு தலைவராக  தனசேகரன் ,பொது சுகாதார குழு தலைவராக சாந்தகுமாரி, கல்வி குழு தலைவராக பாலவாக்கம் விஸ்வநாதன், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக சர்ப ஜெயதாஸ்  நரேந்திரன் , நகரமைப்புக் குழு தலைவராக இளைய அருணா,  பணிகள் குழு தலைவர் சிற்றரசு ,நியமன குழு உறுப்பினர்கள் ராஜா அன்பழகன், வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

tn
 சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல தலைவர் பதவிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் கிடைக்கும் என்று கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த நிலையில் 15 மண்டலங்களிலும் திமுகவினரை பெரும்பான்மையுடன் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு மண்டல தலைவர் பதவி வழங்க வாய்ப்பில்லை. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 14 மண்டல குழு தலைவர் பதவிகளுக்கு திமுகவின் 14  வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.