"தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலையாக மாற்றுக" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
tn

அறிவுசார் நகரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணி, டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ₨77 கோடியில் அமையவுள்ள டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

mk Stalin biopic

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் , தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகள் ஆக மாற்ற வேண்டும் . உற்பத்தியில் தெற்காசிய அளவில் தமிழகம் சிறந்த இடத்தை அடைந்துள்ளது . டைடல் பார்க்குகள்  மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும்.எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.  தொழில்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு காரணமான அமைச்சர் தங்கம்தென்னரசு அதிகாரிகளை பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

stalin

 இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.  2030ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்டதாக வேண்டும் . அதேசமயம் அறிவுசார் நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளது . உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேம்பட்டு உற்பத்தியில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.