"எளிமையும் உறுதியும் அவர் அடையாளங்கள்" - பேராசிரியர் க. அன்பழகன் குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 
tn

தத்துவப் பேராசான் பேராசிரியர் வழியில் தமிழின மீட்சிக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். 

tn

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும் தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவ சிலை நிறுவப்படுவதுடன் , அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று கடந்த  நவம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி பள்ளி கல்வித்துறையின் டிபியை வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டி அதற்கான பெயர் பலகையினை இன்று திறந்து வைத்தார்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "எளிமையும் உறுதியும் அவர் அடையாளங்கள்! திராவிடவியலுக்கு விளக்கவுரை தீட்டினார், விளக்காகவே வாழ்ந்தார். உடலால் மறைந்தாலும் உணர்வால் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமையான தத்துவப் பேராசான் பேராசிரியர் வழியில் தமிழின மீட்சிக்கு உழைப்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.