பிப்.22 ரயில்கள் ரத்து.. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!

 
ரயில்வே

நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருசில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில்வே பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அதன் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே (12711) காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

AK Agarwal takes additional charge as Southern Railway GM- The New Indian  Express

அதேபோல சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712) பிற்பகல் 2.10 மணிக்கு 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இவை தவிர நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே (06746)  காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்ைட- நெல்லூர் இடையே (06745) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.

southern railway: Latest News, Videos and Photos of southern railway |  Times of India

சூலூர்பேட்டை- மூர் மார்க்கெட் இடையே (06742) பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே (06741) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி- மூர் மார்க்கெட் இடையே (66000) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட்- ஆவடி இடையே (6603) இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் பிப்ரவரி 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.