மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் சிறப்பு முகாம்

 
eb and aadhar

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக நாளை முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 
 
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம்  தெரிவித்துள்ளது. ஆனால் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேநேரம், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக வருகிற 28ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக ஆரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பண்டிகை தினங்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5 : 15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும்.

tn assembly

அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருக்கக்கூடிய நிலையில், டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மின் கட்டணத்தினை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் செலுத்திக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதையடுத்து நாளை முதல் மின்வாரிய அலுவலகங்களில் ஆதாரை இணைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது. இதற்கிடையே மின் இணைப்புடன் ஆதாரை 5½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.