"மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்" - அரசாணை வெளியீடு!!

 
tn

 மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

tn govt

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 66-இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் செயலாளர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மை அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தலைமைச் செயலாளர் ,நிதித் துறை தலைமை செயலாளர் ,மனிதவள மேலாண்மை துறை அரசு செயலாளர் ,மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் என மொத்தம் 14 பேர் வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.