’நான் உங்களுக்கு உதவலாமா’- ஸ்டேட் பேங்க் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்..

 
விதியை மீறிய ஸ்டேட் வங்கி! ரூ.7 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி…..

தமிழகத்திலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி பெரம்பலூர்  கிளையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 போலி நகைகளுக்கு ரூ.8.5 லட்சம் கொடுத்த ஸ்டேட் பாங்க்! வாடிக்கையாளர் டிசைன் அப்படி!
பாரத ஸ்டேட் வங்கியின் மூலம்  இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், அரசின் கடன் உதவி திட்டங்கள் ,  குழு சார்ந்த கடன் திட்டங்கள் மட்டுமின்றி சிறு, குறு கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம்  இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி, வேலை வாய்ப்பினை உருவாக்குவதே.. தமிழகத்திலேயே  ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் முதன்முறையாக பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தான் செயல்படுத்தப்பட உள்ளது.

கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி….

இதற்காக தனி அதிகாரியை நியமித்து,  கடன் பெறும் நோக்கத்தோடு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு  உதவி செய்வதோடு, அவர்கள் மேலும் வளர்ச்சியடைய புதிய திட்டங்கள் குறித்து விளக்குவது உள்ளிட்ட தேவையான சேவைகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பெரம்பலூரைத் தொடர்ந்து இந்தத் திட்டம்  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்டேட் பேங்க்  கிளைகளுக்கும் விரிவுபடுத்தவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.