பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் காலமானார்

 
rakesh

தொழிலதிபரும், இந்திய பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறை காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. 

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை அவதிப்பட்டு வந்த அவர் மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா  மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனைக்கு காலை 6.45 மணிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏர்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 பிக் புல் ஆஃப் தலால் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் மூத்த வர்த்தகர் மற்றும் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஃபோர்ப்ஸ் படி, சுமார் $5.5 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டிருந்தார். அண்மையில், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் வீல்சேரில் வந்த ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வந்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உடல்க்குறைவால் உயிரிழந்துள்ளார்.