பாலியல் வன்கொடுமை - ஐஐடி முன்னாள் மாணவர் கைது!

 
tn

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 29  வயதான பட்டியலின மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தன்னுடன்  படித்த மாணவர்கள், பேராசிரியர்கள் என 8 பேர் அப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக  கடந்த ஆண்டு மே மாதம் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில் 8 பேர் மீதும் மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

iit

வழக்குப்பதிவு செய்து  10 மாதங்களுக்கு மேலாகியும் வழக்கை கிடப்பில் போட்டு உள்ளதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் ,  376 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாததற்கு அனைத்திந்திய மாதவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பிடிக்க மயிலாப்பூர் தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்திற்கு சென்றனர்.

arrest

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மயிலாப்பூர் தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் சென்று இதில் ஈடுபட்ட முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்து சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.