நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை- கோவை அதிர்ச்சி

 
sஉ

 நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டு உள்ளதால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில் யோகேஸ்வரனுடன் பழகுவதை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது.

 கோவை மாவட்டத்தில் கொண்டையம் பாளையத்தில் வாரி மெடிகல் அகடமி என்கிற நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டர் உள்ளது.   இந்த இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர்.  

 கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஸ்வேதா என்கிற 18 வயது மாணவி இந்த பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.   இவருடன் திருச்சியை சேர்ந்த பிரியங்கா,  கரூர் காவியா ஆகியோரும் ஒரே அறையில் தங்கி படித்து வந்துள்ளனர் .

பயிற்சி மையத்தில் மதுரையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரும் படித்து வந்துள்ளார்.   ஸ்வேதாவிற்கு யோகேஸ்வரனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் யோகேஸ்வரனுடன் பழக கூடாது என்று  பெற்றோர் கண்டித்துள்ளனர்.

மின்

 இந்த விவகாரத்தில் யோகேஸ்வரன் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க வேண்டாம் என்று அவரது பெற்றோர் நிறுத்தியிருக்கிறார்கள்.  சொந்த ஊருக்கே அழைத்து சென்று படிக்க வைத்திருக்கிறார்கள்.   இந்த நிலையில்தான் நேற்று காலை முதல்  உடல்நிலை சரியில்லாமல் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்திருக்கிறார் ஸ்வேதா.   நேற்று மாலையில் பிரியங்கா, காவியா ஆகிய இருவரும் வகுப்பிற்கு சென்று இருக்கிறார்கள்.

வகுப்பு முடிந்து மெஸ்சில் இருந்து ஸ்வேதாவுக்கு சேர்த்து உணவு வாங்கி கொண்டு வந்து பார்த்தபோது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது.   ஜன்னல் வழியாக பார்த்தபோது ஸ்வேதா துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் பிரியங்கா.

உடனே வார்டனுக்கு தகவல் சொல்ல அவர்கள் மூலம் கதவை உடைத்து ஸ்வேதாவை மீட்டு குரும்பபாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அங்கு நடந்த பரிசோதனையில் ஸ்வேதா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஸ்வேதாவிற்கும் யோகேஸ்வரனுக்கு காதல் இருந்து வந்துள்ளதால்,  இவர்கள் காதலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ஸ்வேதா செய்த தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.