வேன் மோதி பள்ளி மாணவன் பலி - பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் டிஸ்மிஸ்!!

 
tn

பள்ளி வேன் மோதி மாணவன் பலியான சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் தீக்ஷித்  என்ற மாணவன் பள்ளி வாகனம் மோதி பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்தார்.  இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ்,  முதல்வர் தனலட்சுமி ,வாகன ஓட்டுனர் பூங்காவனம் , பெண் உதவியாளர் ஞான சக்தியாகிய மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதில் பூங்காவனம் மற்றும் ஞானசக்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவன் வேன் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு,  பள்ளி நிர்வாகத்திற்கு வளசரவாக்கம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியது.

tn

அத்துடன் தீக்ஷித் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.  போக்குவரத்து குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களுள் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு காவல்துறை ஆணை பிறப்பித்தது .

tn

இந்நிலையில் சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.