திடீர் தீ விபத்து - சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

 
ttn

சதுரகிரி மலைப்பாதையில் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக மலை கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

tn

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

sathuragiri

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழாவை ஒட்டி கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து அம்மன் கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.  இதன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு வரும் 5ம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது . இதனால் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கோயிலுக்கு செல்ல அடிவாரப்பகுதியில் குவிந்த 70 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.  சாப்டூர் வனசரகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவராத்திரி விழாவை ஒட்டி சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.