எம்.பி.பி.எஸ் படிப்பு எனக்கு கலைஞர் போட்ட பிச்சையா? வேதனையில் தமிழிசை...காயத்ரி ரகுராம் ஆதரவு!!

 
tn

பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

பொதுவாகவே அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒருவர் ஒருவர் சேற்றை வாரி இறைப்பது போல கருத்துக்களை வீசி கொள்வார்கள். பல நேரங்களில் இது அவதூறு கருத்துக்களாகவும், கொச்சையாகவும் கூட மாறிவிடுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது மீதான திமுகவினர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார். 

gayathri-4

அப்போது பேசிய அவர் , "தமிழிசை எம்பிபிஎஸ் படித்தது கலைஞர் போட்ட பிச்சை என்ற ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார்கள்.  நான் அண்ணன் ஸ்டாலினிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன்.  இது நாகரீகமான அரசியலா? நான்  மருத்துவ படிப்பில் சேரும் போது கலைஞர் முதலமைச்சராக இல்லை . அப்போது முதலமைச்சராக இருந்தவர் புரட்சித்தலைவர்  எம்ஜிஆர். அதுமட்டுமல்ல மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து ஒரு அரியர்  கூட இல்லாமல் தேர்ச்சி பெற்ற மாணவி நான்.   வெளிநாடுகளுக்கு சென்று படித்து தனது உயர்கல்வியை மேம்படுத்தி கொண்டேன்.  அதனால் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

tn

ஒரு கருத்தை முன்வைக்கும் போது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசித்தான் ஆக வேண்டும் என்றால் தமிழகத்தில் எத்தனை அரசியல்வாதிகள் தங்கள் டிகிரி சர்டிபிகேட்டுடன் பேசுவார்கள் .
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தமிழ், தமிழ் என்று பேசுகிறது.  அவர்களின் குடும்பத்தில் எத்தனை தமிழ் கல்வி பயில்கிறார்கள்  என்பதை அவர்கள் சான்றுடன் நிரூபித்து விட்டு பின்னர் பேசட்டும்.  அதனால் இதுபோன்ற கொச்சையான, நாகரிகமற்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.



இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக கலை, கலாச்சார பிரிவு தலைவர்  காயத்ரி ரகுராம் , நமது தெலுங்கானா பாண்டிச்சேரி கவர்னர் மீது தவறான விமர்சனம் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.  தமிழக பாஜக மாநில தலைவராக தமிழிசை பதவி வகித்த போது காயத்ரி ரகுராமிற்கும், தமிழிசைக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.