குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவில் நீச்சல் குளம், வாட்டர் பார்க் ,5 சொகுசு விடுதிக்கு சீல்

 
queensland theme park chennai

சென்னை பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வந்த குயிண்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருந்த நீச்சல் குளம்,இமாலய ரைட்,வாட்டர் பார்க் ,5 சொகுசு விடுதி  உள்ளிட்டவற்றிற்கு சீல் வைத்து  ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.

Queens Land Amusement & Water Park Chennai (Timings, History, Entry Fee,  Images & Information) - Chennai Tourism 2022


சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பன்சத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா.சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் அறநிலைத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால்சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்திருப்பதாகவும், இடத்தை காலி செய்யவும் கோரி, அறநிலையத்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பபட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்தினர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில், இடத்தின் உரிமையாளராக கோவிலை கருத முடியாது; அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உரிமை இல்லை.இடத்தின் உரிமை தொடர்பான பிரச்னை, நில நிர்வாக கமிஷனரிடம் நிலுவையில் உள்ளது. எனவே, அறநிலையத்துறை இணை கமிஷனர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.இந்த நிலையில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அனாதினம் ஆக்கிரமிப்பு என 32.41 சென்ட்
நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர். 

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் சைலேந்திரன்  தலைமையில் சென்ற வருவாய்துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடமன் அங்குள்ள   ஆக்கிரமிப்பில் இருந்த நாகத்தா ஏரி ஆக்கிரமிப்பை  மீட்டு அங்கு கட்டப்பட்டு இருந்த ரோப்கார் இயக்கும் கட்டிடம், இமாலய ரைட்,நீச்சல் குளம்,பேப்பர் போர்ட்,பேட்டரி ஸ்கூட்டர்,ரயில் தண்டவாளம், என ஆகிரமிப்பில் இருந்த அனைத்திற்கும் சீல் வைத்தனர்.இதனை தொடர்ந்து குயின்ஸ்லேண்ட் நிருவனத்திற்கு சொந்தமான ப்லேசண்டே ஹோட்டலில் 5 சொகுசு விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மீட்டகப்பட்ட சொத்தின் மதிப்பு 200 கோடியாகும்.பாப்பான்சத்திரம் கிராமத்தில்  குயின்ஸ்லேண்ட்க்கு சொந்தமாக 177 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது.அதனோடு இணைத்து இந்த 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.