சரவணன் தான் அமைச்சர் கார் மீது செருப்பு வீச சொன்னார் - பாஜக போலீசில் புகார்

 
annamalai

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் தான் தனது ஆட்களை துாண்டிவிட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச வைத்துள்ளார் எனவும், அவர் மீது நடாவடிக்கை எடுக்க கோரியும் காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார்.  அவரது உடல்  கடந்த 13ம் தேதி தனி விமான மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பா.ஜ., நகர தலைவர் சரவணன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

PTR issue

செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், செருப்பு வீச்சு சம்பவத்தில் டாக்டர் சரவணனையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க மாவட்ட பொது செயலர் அனந்தஜெயம் தலைமையில் நிர்வாகிகள், கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதில், சரவணன் தன் ஆட்களைத் துாண்டி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசச் சொல்லி உள்ளார். இவ்வழக்கில் சரவணன் கைது செய்யப்படவில்லை அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.