தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் மணல் கடத்தல் - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
Annamalai

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். விழா மேடையில் பேசிய அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு வெற்றிகரமாக 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் பொதுமக்களும், பெண்களும் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். 

annamalai

திமுக ஆட்சியின் ஒரு ஆண்டில் மக்களுக்கு சலிப்பு வந்துவிட்டது. . தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த நில நாட்களாக மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒருங்கு சீர்கெட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அரசின்  திட்டங்களை தமிழகத்தில் பெயர் மாற்றம் செய்து திராவிட முன்னேற்ற கழக அரசு, அரசியல் செய்து வருகிறது. ஆனைமலையாறு நல்லாறு திட்டம் மற்றும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக கொண்டு வரும் திட்டம் உள்ளிட்டவற்றிற்காக பாஜக பாடுபடும். 2024 நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி செல்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.