மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்த வேண்டும்!!

 
fisher

கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகம் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும்,  திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று  முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது . ஜூன் 14ஆம் தேதி முடிய 61நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

fisher

மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பாட்டு மீன் வளம் பெருக வாய்ப்புள்ளது என்று தமிழக அரசு தனது ஆணையில்  குறிப்பிட்டுள்ளது.  அதன்படி 61நாட்கள் முடியும் வரை அனைத்து மாவட்ட மீனவர்கள் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு மீன்பிடி தடை காலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

tn

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் , "மீன்பிடி தடைக்காலம் தொடங்கி விட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்"என்று கேட்டுக்கொண்டுள்ளார்.