மக்களை தேடி மருத்துவத்தின் மூலம் 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிப்பதே இலக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

மக்களை தேடி மருத்துவம் மூலம் தமிழகத்தில் தொற்றா நோயின் இறப்பு விகிதம் குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை கேகே நகர் நெசப்பாக்கத்தில் திமுக அரசின் "ஓயாத உழைப்பின் ஓராண்டு நிறைவு" சாதனைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: இந்திய அளவில் தனியார் அமைப்பு (c voters) சிறப்பாக செயல்படும் முதல்வர் யார் என்ற கருத்து கணிப்பு நடத்தியது.அதில் தமிழ்நாடு 84.57, மேற்க்குவங்கம் 80.16, அசாம்79.66 சதவீதம் கேரளா 72.16 சதவீதம் பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிமுகம் செய்த பிறகு 41% இருந்த பேருந்து பயன்பாடு 60 % ஆக உயர்ந்துள்ளது. பெண்கள்  பொருளாதார ரீதியாக உயர்வதற்கு இத்திட்டம் உதவியாக உள்ளது.2073 கோடி ரூபாய் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு  பருவமழைக்கு மழை நீர் தேக்கம் இல்லாத தொகுதியாக விருகம்பாக்கம் மாறும் என்றார். அதற்காக 95 கோடி விருகம்பாக்கம் தொகுதிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் காரணமாக இந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்கும் நிலையே உள்ளது. அடுத்த ஆண்டு நிச்சயமாக சென்னையில் மழை நீர் தேங்காது.

ma Subramanian

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் இணையும் 6 லட்சம் மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல், மாதம் 1000 கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.அரசு பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வியில் 2 ம் மற்றும் 3ம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 69.26 லட்சம் பேர் இன்று வரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதன் முழு பயன் தெரியவரும். தொற்றா நோயின் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளதாகவும்தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவத்தின் மூலம் 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது நோக்கமாக உள்ளதாகவும் கூறினார்.