நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரப்பிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் தகவல்

 
Ma Subramanian Ma Subramanian

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அதில் விதிமீறல் இருந்தா தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே முடிந்துள்ள நிலையில்,  விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் இரண்டு குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர் ஆகியுள்ளோம் என பதிவிட்டு இருந்தார். அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

nayan wikki

இந்நிலையில்,  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அதில் விதிமீறல் இருந்தா தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பெற்ற உடன் அதில் விதிமீறல் இருக்கிறதா?.. முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.