பெற்றோர்கள் தங்களது ஆசைகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil-mahesh-3

பெற்றோர்கள் தங்களது ஆசைகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது எனவும், அவர்களுக்கென இருக்கும் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெளிங்கடன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை பள்ளி மேலாண்மை குழு துவக்க விழா நாளை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: ஒவ்வொரு அரசு பள்ளியும் தன்னிரைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்கு வருவது மட்டுமல்லாமல், பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் பங்குகொள்ள வேண்டும். இதற்காக பெற்றோர்கள் ஆசிரியர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். பெற்றோர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கான போதிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதற்காக 23 லட்சப் பெற்றோர்களுடன் கருத்துக்கேட்பு விழிப்புணர்ஙு கூட்டம் நடைபெற்றது.

anbil

 

மாணவர்கள் தைரியமாக, பதற்றமில்லாமல் பொதுத்தேர்வை எதிர் கொள்ளவேண்டும். தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்களது தனித்திறமையை வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் மீது தங்களது ஆசையை திணிக்க கூடாது. அவர்கள் என்னவாக வேண்டுமோ அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளது திறமையை கண்டறிந்து, அதனை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கான நாற்காலி நாட்டில் உள்ளது. மாணவர்களை பாதுகாக்கவே நான் இருக்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். என கூறினார்.