குஷியில் மாணவர்கள்.. இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை..

 
விடுமுறை


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தபடி,  தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு  இன்று ( ஜூன் 13)   ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதனையொட்டி ஆசிரியர்கள், மானவர்களை வரவேற்க பள்ளிகளில்  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.  அத்துடன்  இன்று முதல் 20 நாட்களுக்குள் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும் என்றும், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு முதல் ஐந்து நாட்கள் அதாவது இந்த வாரம் முழுவதும் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகள் தொடங்கப்படும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தை,   அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்ளே ,  பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

குஷியில் மாணவர்கள்..  இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை..

5, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி டிசி   வழங்க வேண்டும் எனவும்,  இதர வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர் தாமாக முன்வந்து இசை கேட்டால் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால்  மாணவர்களும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பள்ளிக்குச்  வந்துள்ளனர்.  முன்னதாகவே அறிவிக்கப்பட்டபடி 2022 - 23 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.   

குஷியில் மாணவர்கள்..  இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை..

அதுமட்டுமன்றி இந்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது அதாவது மத்திய அரசின் அதில் கற்றுத்தரப்படும் பேஷன் டெக்னாலஜி,  டைலரிங் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் வரும் சனிக்கிழமை முதல் இந்த கல்வியாண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.