தமிழக மாணவர்கள் மீட்பு விவகாரம் : வெளியுறவுத்துறை அமைச்சருடன் தமிழக சிறப்பு குழு சந்திப்பு..

 
டெல்லியில் தமிழக சிறப்புக்குழு , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு..

உக்ரைனில் உள்ள  தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட நியமிக்கப்பட்டுள்ள தமிழக சிறப்புக்குழுவினர் , இன்று  வெளியுறவுத்துறை  ஜெய்சங்கரை சந்தித்து பேசினர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில்  மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மாணவர்களை தநை வழியாக உக்ரைன் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் தயாகம் அழைத்து வரப்படுகின்றனர்.  ஆனால் பல மாணவர்கள் போதிய உணவின்றி தவிப்பதாகவும், உக்ரேனியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குவதாகவும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

டெல்லியில் தமிழக சிறப்புக்குழு , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு..

இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள  தமிழக மாணவர்களை விரைவாக மீட்க,  அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட  சிறப்பு குழுவினை தமிழக அரசு நியமித்தது.  தமிழக எம்.பி க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா, எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, ஏ.கே.கமல் கிஷோர், எம்.பிரதீப் குமார், அஜய் யாதவ், கோவிந்த ராவ் மற்றும் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லியில் தமிழக சிறப்புக்குழு , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு..

இந்த சிறப்புக்குழு இன்று டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியது. அப்போது  உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை மீட்டு வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்டனர். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் தமிழக குழுவிற்கு மீட்புப்பணிக்கான அங்கீகாரம் அளித்தால், மாணவர்களை மீட்டு வருவதில் தமிழக குழுவிற்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். இந்த காரணத்தை வலியுறுத்தியே  மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை  தமிழக சிறப்புக் குழுவினர் சந்தித்தனர்.