#TNBudget2022 - 21 மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் - பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!!

 
ptr

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு நிதி நிலை அறிக்கை தற்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்நிலையில்  பட்ஜெட் அறிக்கையை வாசிக்க தொடங்கிய  நிதியமைச்சர், "தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதலமைச்சர் திகழ்கிறார் என்றார். அத்துடன்  8 ஆண்டுகளுக்கு பின்னர் அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது. அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16% சதவீதத்தில் இருந்து 3.08% ஆக குறைய வாய்ப்பு என்றும் தெரிவித்தார். அத்துடன் சமூக நலத்திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம் என்றும்  கூறினார். 

tn

பட்ஜெட் தாக்கலின் முக்கிய அம்சங்கள்:-

பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும்

சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்

தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும்

தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ₹82.86 கோடி நிதி ஒதுக்கீடு

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்

அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் 

தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ₹2 கோடி ஒதுக்கீடு

tn

நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது.

அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு 

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்

தொல்லியல் ஆய்வுகளுக்காக ₹7 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ₹10 கோடி செலவில் அருங்காட்சியகம்

நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ₹15 கோடி ஒதுக்கீடு 

வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் -10 லட்சம் மனுக்கள் மீது தீர்வு