"தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" - ஜி.கே. வாசன்

 
tn

 தமிழக அரசின் 10 % சதவிகித போனஸ் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 % சதவிகித போனஸ் போதுமானதல்ல . இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

gk

கடந்த கொரோனா காலங்களில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கூட 10 % சதவிகித போனஸ் வழங்கப்பட்டது . ஆனால் தற்பொழது நாடு பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழுந்து , சகஜ நிலைக்கு திருப்பியுள்ளது . வழங்கம் போல் அனைத்து பேருந்துகளும் இயங்குகிறது . அனைத்து தொழில் நிறுவனங்களும் சீராக இயங்குகின்றது. 

tn

இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னர் வழங்கியது போல் தற்பொழுதும் 20 % சதவிகிதம் போனஸ் தொகை கிடைக்கும், இந்த வருடம் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடலாம் எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருந்த தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .  போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் , பொதுத்துறை ஊழியர்களின் எண்ணங்களையும் , எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு போனஸ் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து வழக்கம் போல் 20 % சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று  குறிப்பிட்டுள்ளார்.