"செல்போன் மூலம் இயக்கப்படும் பம்பு செட்டுகள்; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!!

 
tn

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று முழு நிதி நிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் ,ஆடு ,மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பயிர் காப்பீட்டு தொகையாக 2055 கோடி வழங்கப்படும், கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை  அதிகரிக்க 28.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

tn

#வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

#தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது

#புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது

#காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்

#சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

#விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது

#விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்ல கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கி.மீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்

tn

#விதை முதல் விற்பனை வரை அறிய 'செயலி' உருவாக்கப்படும் 

#விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ₹5157 கோடி வழங்கப்படும்

#டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ₹80 கோடி ஒதுக்கீடு

#உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு eb

#பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு

#முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு

#வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை

#சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்

#தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத்  திட்டத்தின் மூலம் 3 லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி நிதி ஒதுக்கீடு

govt

#வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு

#பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும்  திட்டம் ₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

#பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் " மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அண்டை மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதிகள் செய்யப்படும்.

#அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி நிதி; ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்

#உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை. இதன் மூலம் மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு

#பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன விவசாயிகளின் குறைகளை தீர்க்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது