தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு ஜி.கே. வாசன் பாராட்டு!!

 
tn

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அவர்கள் இறுதிப்போட்டி வரை வெற்றி பெற்று , வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது . ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது . 
இதில் இந்தியா சார்பில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சங்கர் முத்துசாமி ஆண்கள் அறையிறுதி போட்டியில் உலக தர வரிசையில் 4 ஆம் இடத்தில் உள்ள தாய்லந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் போட்டியிட்டு 21-13 , 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . 

ttn

இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி , இந்தியாவின் புகழை , ஏன் உலக அளவில் தமிழகத்தின் புகழை நிலைநாட்டியிருக்கிறார் . இதனால் இவரது புகழ் இந்தியா முழுவதும் ஏன் உலக அளவில் பரவுகிறது . 
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அவர்கள் சீனதை பேயின் குவான் லின்குவோ அவர்களிடம் 14-21 , 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியுற்றார் . இதனால் தமிழக வீரர் சங்கர் முத்துசாமிக்கு வெள்ளிப் பதக்கம் கொடுக்கப்பட்டது .  இது உலக ஜூனியர் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 4 வது வெள்ளிப்பதக்கம் . 

gk

இந்த வெற்றியின் மூலம் , 2016 க்கு பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் நம் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை . இதனால் ஒட்டு மொத்த தமிழகமே பெருமிதம் அடைகிறது . தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அவர்கள் பெற்ற வெற்றியும் , வென்ற வெள்ளிப் பதக்கமும் அவரது விளையாட்டுத்திறமைக்கு கிடைத்திருக்கும் பரிசாகும் . அவரது விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும் , பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துகள் . தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அவர்கள் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கும் , வெள்ளிப்பதக்கம் வென்றதற்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துகளையும் த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் . மத்திய மாநில அரசுகள் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி அவர்களை பாராட்டும் வகையிலும் , அவரது தொடர் விளையாட்டுக்கு உதவிடும் வகையிலும் , அவருக்கு பரிசுகளும் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் . சங்கர் முத்துசாமி அவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைந்து , பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு ஏன் இந்தியாவிற்கே உலக அளவில் விளையாட்டில் மென்மேலும் புகழ் சேர்க்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.