இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. நிதி ஆயோக் வெளியிட்ட ரிப்போர்ட்..

 
தமிழகம் முதலிடம்

மாநிலத்தின் பொருளாதாரம், கட்டமைப்பு என நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக   நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக்

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்   வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக், மத்திய அரசு  உள்ளிட்டவை இணைந்து இந்த தரவரிசை பட்டியலை  தயாரித்திருக்கிறது. இந்தியாவில் மாநிலங்களின் கல்வி, உட்கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீட்டை நிதி ஆயோக் தரவரிசைப் படுத்தி வருகிறது.

நவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..

அதன்படி தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகம்  முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதாவது, நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   பொருளாதாரம் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில்   தமிழகத்தின் வளர்ச்சி வலுவாக உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நிதி ஆயோக் வெளியிட்டிருந்த சுகாதராத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில்  தமிழகம் 2 வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.