தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது???..

 
சுங்கச்சாவடி

 தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தப் புதிய கட்டணம் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 தமிழ்நாட்டில்  எகிறும் சுங்கச்சாவடி கட்டணம்!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள்  அமைக்கப்பட்டு , அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  கால விரயம் - சில்லறைத் தட்டுப்பாடு - எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக்  டிஜிட்டல் பேமென்ட் நடைமுறை அமலுக்கு வந்தது.  சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில், நான்கு நுழைவாயில்கள்  ஃபாஸ்டேக் பரிவர்த்தனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் ஒரு நுழைவாயிலில் மட்டுமே, சுங்கவரியை பணமாகச் செலுத்தும் முறை உள்ளது.   கிட்டதட்ட 90% சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறையே கடைபிடிக்கப்படுகிறது.

 தமிழ்நாட்டில்  திடீரென எகிறும் சுங்கச்சாவடி கட்டணம்!

 ஆனாலும் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.  ஆகையால்   ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம்  சுங்கக் கட்டணம் வசூலிக்கும்  முறையை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம்  திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல்  தெரிவிக்கின்றன.  இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம்  உயர வாய்ப்பு உள்ளதாகவும், செப்.1 முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.  இந்த திருத்தப்பட்ட  கட்டணம் ஓராண்டு  வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் உள்ள  நெடுஞ்சாலைகளில் மொத்தம்  50 பிளாசாக்கள் உள்ள நிலையில்,   மீதமுள்ள பிளாசாக்களில்  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் கட்டணங்கள்  திருத்தப்படும் என்று கூறப்படுகிறது.