ஆன்மிகமும் காவியும் சேர்ந்தது தான் தமிழகம் - தமிழிசை சௌந்தரராஜன்

 
tamilisai

ஆன்மிகமும் காவியும் சேர்ந்தது தான் தமிழகம் எனவும், தமிழகத்திற்கும் காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் நாராயணி பீடம் மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, சாதனைகள் செய்த பெண் துறவிகளுக்கு சான்றிதழ்கள் மற்று விருதுகளை வழங்கினார். 

tamilisai

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: காவி தான் ஆன்மிகம். ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும்.அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ் தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை.ஆன்மிகமும் காவியும் சேர்ந்தது தான் தமிழகம். ஆனால் தமிழகத்திற்கும் காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். பலம் பொருந்திய காவி துறவி பெண்களை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோயில் கூட மூடப்படவில்லை. வழிபாட்டுட்டுன் தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். இவ்வாறு பேசினார்.