கொடி நாள் நிதி வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கொடி நாள் நிதி வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொடி நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கொடி நால் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள்!உயிரைத் துச்சமென மதித்து, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பது நமது மகத்தான கடமை. நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது" என்கிற அவர்களின் நம்பிக்கை ஒளிவீசிட, நமது நன்கொடையே அத்தாட்சி! இவ்வாண்டும் பெருமளவில் நிதிவழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு காணிக்கையாக்கிட, அனைவரும் முன்வாரீர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சு. அமிர்த ஜோதி, இ.ஆ.ப., அவர்களிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். #CMMKStalin #TNDIPR @CMOTamilnadu @KN_NEHRU @mp_saminathan @Collr_Chn pic.twitter.com/Stgf8C5AFQ
— TN DIPR (@TNDIPRNEWS) December 7, 2022
இதனிடையே கொடி நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ச்டாலின் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதியிடம் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


