தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க 6 இடங்களில் சோதனை சாவடி - டிஜிபி பேட்டி

 
dgp sylendrababu dgp sylendrababu

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க 6 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் இருந்து வரக்கூடிய மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க 6 இடங்களில் குறிப்பாக தென்காசி, பொல்லாச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகிறோம். அதேபோல் முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தது போல முக்கியமான சுங்கச்சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. அது பொருத்தப்பட்ட பிறகு சந்தேகத்துக்குரிய வாகனங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் அது இருக்கும். கடந்த நவம்பர் மாதம் வரையில் 45 ஆயிரம் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.