சூராவளி காற்று வீசும்...கடலுக்கு செல்ல வேண்டாம்! - தமிழக அரசு எச்சரிக்கை

 
rain

வங்க கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதன் பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயரை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

rain

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் நாளை முதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி புயல் காற்று வீசும் என்ப தால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடலோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.