இயற்கை உர தயாரிப்பு மையங்களை தனியாருக்கு ஒப்படைக்க முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 
ma subramanian

சென்னை மாநதராட்சியின் இயற்கை உர தயாரிப்பு மையங்களை தனியாருக்கு ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை கண்ணமாபேட்டை இடுகாடு வளாகத்தில் இயற்கை உர திருவிழாவை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ma Subramanian

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் சுமார் 5100 மெட்ரிக் டன் குப்பைகளை பராமரிப்பது சவாலாக உள்ளது. இதில் மக்கும், மக்காத குப்பை பிரிக்கப்பட்டு உரமாக தயாரிக்க 208 மையங்கள் உள்ளன. தனியார் கல்லூரியின் முயற்சியால் கண்ணம்மாபேட்டை இயற்கை உர மையத்தில்  குப்பைகள்  தரம்பிரித்து உரமாக தயாரிக்கப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு குப்பையில் ஒரு டன் உரம் வரை தயாரித்து டன் ஒன்றுக்கு 5000 ரூபாய் என விற்கபடுகிறது. மேலும் சென்னையில் உள்ள மற்ற குப்பைகள் தரம் பிரிக்கும் மையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.