ஜெட் வேகத்தில் இந்து சமய அறநிலைத்துறை - அமைச்சர் சேகர் பாபு

 
sekar babu

ஜெட் வேகத்தில் இந்து சமய அறநிலைத்துறை பயணித்துக் கொண்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை ஓட்டேரியிள் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அந்த கோவில்களில் உள்ள ஆக்கரிமிபுகளை பற்றி கேட்டறிந்து  அதற்கு உரிய நடைவேடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது; தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து  கோவில்களிலும் அடிப்படை வசதி வேண்டும் என ஆய்வு செய்து  வருகிறோம், விரைவில் அதன் நடைவடிக்கை எடுக்கப்படும்.இந்த 9 மாதம் காலங்களில் 100 மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு  நடத்தி முடித்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கோவில்களில் 2400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கரிமிப்புகளை மீட்டுள்ளோம் ஒவ்வொரு திருகோவில்களிலும் பணி புரியக்கூடிய ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக 1000 ரூபாய தமிழக முதல்வரால் வழங்கபட்டு வருகிறது.

sekar babu

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓடாமல் இருந்த  திருத்தேர்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைக்க படாமல் இருந்த திருத்தலங்கள் பழுதடைந்த வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. ஆக மொத்தத்தில் ஜெட் வேகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினார். 10 ஆண்டுகள் நிலுவையில் இருக்கின்ற திருக்கோவில் பணிகளை  விரைவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வடபழனி ஆண்டவருடைய திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிறப்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. 
சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுக்கள் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு சட்ட வல்லுனர்களின் ஆலோசனை படி கோவிலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.