காவல்துறை அதிரடி வேட்டை - 2 நாட்களில் 6.5 டன் குட்கா பறிமுதல்

 
gutka

தமிழ்நாட்டில் கடந்த 28-ம் தேதி முதல் நேற்று வரை 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

28ஆம் தேதி முதல் 27.04.2022 வரை தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 2.0 இந்த மாதம் நடத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் கஞ்சா, குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

gutka

இதனையடுத்து தமிழகம் முழுவது போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பூ பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 28-ம் தேதி முதல் நேற்று வரை 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட 6.5 டன் குட்கா மதிப்பு சுமார் ரூ.7.5 லட்சம் என காவல்துறை கூறியுள்ளனர். குட்கா பறிமுதல் தொடர்பாக 2028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2034 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.